
ஆந்திராவில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை அமைக்கும் சோனு சூட்
ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால் பல முக்கிய நகரங்களில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை நிறுவும் வசதியைச் செய்து கொடுக்க முன்வந்துள்ளார் சோனு சூட். இதற்காக பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களுக்கு பத்து நாட்களுக்கு முன்பு ஆர்டர் கொடுத்திருந்தார். அவற்றில் சில வந்தும் விட்டன. அவற்றை அமைக்கும் வேலைகளை தற்போது ஆரம்பித்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள கர்னூல் மருத்துவமனையில் தற்போது ஒரு உற்பத்தி இயந்திரத்தை அமைத்து வருகிறார். அடுத்து நெல்லூரில் ஒன்றை அமைக்க உள்ளார். ஜுன், ஜுலை மாதங்களில் மற்ற மாநிலங்களிலும் அமைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் சோனு சூட்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!