
நேரடி தெலுங்குப் படத்தில் விஜய் : பிரம்மாண்டத் தயாரிப்பு
அதற்குப் பிறகு அவர் நடிக்க 67வது படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க உள்ளாராம். கார்த்தி, நாகார்ஜுனா நடித்த "தோழா" படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இப்படத்தை இயக்கப் போகிறாராம்.
இப்படத்தைத் தெலுங்கிலும் நேரடியாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அது மட்டுமல்ல பான்-இந்தியா படமாக தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடும் எண்ணம் உள்ளதாம். இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடித்த "மாஸ்டர்" படமும் தெலுங்கு, ஹிந்தியில் வெளியானது. ஆனால், தெலுங்கில் மட்டும் தான் வெற்றி பெற்றது. ஹிந்தியில் படுதோல்வி அடைந்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!