100 மில்லியன் கிளப்பில் இணைந்த விஜய்யின் 6வது பாடல்
மே 22, 2021
Advertisement
யு டியுப் வீடியோ தளங்கள் வந்த பிறகு மக்கள் டிவிக்களில் பாடல்களை அதிகம் பார்ப்பதை விட தாங்கள் விரும்பும் நேரத்தில் யு டியூபிலேயே பாடல்களைப் பார்த்துவிடுகிறார்கள். அதனால், பல பாடல்கள் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டு அதைப் பார்க்கும் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.
தமிழ் சினிமா பாடல்களில் "மாரி 2" படத்தில் இடம் பெற்ற "ரவுடி பேபி" பாடல் 1150 மில்லியன் பார்வைகளை விரைவில் தொட உள்ளது. அந்தப் பாடலைப் போல வேறு எந்த ஒரு பாடலும் 1000 மில்லியன் பார்வைகளைத் தொடவில்லை.
100 மில்லியன் பார்வைகள் என்பதுதான் ஒரு இலக்காக யு டியுபில் இருக்கிறது. அந்த விதத்தில் இதுவரையில் 20க்கும் மேற்பட்ட தமிழ் சினிமா பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அதில், புதிதாக விஜய்யின் "தெறி" படப் பாடலான "ஈனா மீனா டீக்கா" பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. யு டியூவில் 100 மில்லியனைக் கடந்துள்ள விஜய்யின் 6வது பாடல் இது.
இதற்கு முன்பு, "மாஸ்டர்" படத்தின் "வாத்தி கம்மிங்" வீடியோ பாடல், "மெர்சல்" படத்தின் "ஆளப்போறான் தமிழன்", "மாஸ்டர்" படத்தின் "வாத்தி கம்மிங்" லிரிக் வீடியோ, "பிகில்" படத்தின் "வெறித்தனம்", "தெறி" படத்தின் "என் ஜீவன்" ஆகிய பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன.
"தெறி" படத்தின் இரண்டு பாடல்கள் 100 மில்லியனைக் கடந்துள்ளன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அட்லி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இயக்கத்தில் விஜய், எமி ஜாக்சன், சமந்தா மற்றும் பலர் நடித்த இப்படம் 2016ம் ஆண்டு வெளிவந்தது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!