
கொரோனா நோயளிகளுக்கு உணவு வழங்கும் சரண்யா
இப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களுக்காக பலர் நியாய விலையில் உணவுகளை வழங்கி வருகின்றனர். அதே சமயம் சில பிரபலங்கள் சேவை மனப்பான்மையில் அவர்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவுகளை இலவசமாகவே வழங்கி வருகிறார்கள்.
டிவி நடிகை சரண்யா, அவருடைய வீட்டில் சமையல் செய்து அவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் உணவுகளைக் கொடுத்து வருகிறார். இது குறித்து இன்ஸ்டாகிராமில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன். லாக் டவுன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்து கொண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன். இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச் செய்தி கலக்கத்தை கொடுக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
சில நல்ல உள்ளங்கள் இப்படி சில சேவைகளை மக்களுக்கு வழங்கி வருவதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!