
ஷைலஜா டீச்சரை ஏன் ஒதுக்கினீர்கள் ? : முதல்வரை நோக்கி நடிகைகள் கேள்வி
இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற முடிந்த சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஆனால் அதில் கே.கே.ஷைலஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படாமல் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர். இது கேரளா மக்களிடையே மிகப்பெரிய ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
அதிலும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து #BringBackShailajaTeacher என்கிற ஹேஷ்டாக் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. நடிகை மாளவிகா மோகனன், “எதற்காக சைலஜாவை மாற்றினீர்கள், என்ன நடக்குது இங்கே முதல்வரே” என முதல்வர் பினராயி விஜயனை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.
இவரை தொடர்ந்து நடிகை பார்வதியும் கே.கே.ஷைலஜாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். “கேரளாவில் உள்ள 140 சட்டசபை உறுப்பினர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கே.கே.ஷைலஜா டீச்சர். கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக நாம் போராடிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் அவருக்கு அமைச்சர் பதவி இல்லையா..? எதை சொல்லியும் இதை நியாப்படுத்தாதீர்கள்.. தங்களுக்கு வேண்டிய தலைவர்களை மக்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.. அதை மறந்து விடாதீர்கள்” என காட்டமாக கூறியுள்ளார்.
இதேபோல நடிகைகள் ரீமா கல்லிங்கல் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரும் கே.கே.ஷைலஜா டீச்சருக்கு ஆதரவாக முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!