
தமிழில் வாய்ப்பு தேடும் மாடல் அழகி
தாதி என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது விஜய் யேசுதாஸ் ஜோடியாக சல்மான் 3டி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகிறது. லவ் நாட் பார் மீ என்ற இந்தி படத்திலும் நடிக்கிறார்.
மீனாட்சிக்கு தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறதாம். சல்மான் 3டி வெளிவந்த பிறகு தனக்கு வாய்ப்புகள் குவியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதற்கிடையில் தமிழில் தனக்காக வாய்ப்பு தேடவும், கதை கேட்கவும் மேலாளரை நியமித்து அவர் மூலம் தனது சமீபத்திய புகைப்படங்களை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அனுப்பி வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!