
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு 2 படங்கள் இயக்கும் மூடர்கூடம் நவீன்
தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் அக்னிச் சிறகுகள் என்ற படத்தை இயக்கி உள்ளார். மூடர் கூடம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகியும் நவீன் இயக்கத்தில் அடுத்த படம் வெளிவரவில்லை. இந்த நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அவருக்கு இரண்டு படத்தை இயக்கித் தரும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. இதனை அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து முடித்துள்ள காட்டேரி, பல்லு படாம பார்த்துக்கணும் உள்ளிட்ட பல படங்கள் இன்னும் வெளிவராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!