
படப்பிடிப்பு நிறுத்தம்: ரூ.1,000 கோடி முடக்கம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த அமைச்சரிடம் வேண்டினோம். ஆனால் கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நிலையில், முதல்வர் அறிவித்துள்ள ஊரடங்கை தமிழ் திரையுலகமும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊரடங்கு காலத்தில் திரைத்துறை சார்ந்த எந்த பணிகளையும் செய்வதில்லை என முடிவு எடுத்துள்ளோம். கொரோனா பரவல் குறையும் போது, அரசு அறிவிக்கும் தளர்வுக்கு பின் திரைப்பட பணிகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!