
கொரோனா மருத்துவமனைக்கு நிதி சேர்க்கும் வலிமை நாயகி
கடந்த நான்கு நாட்களில் இதற்காக 36 லட்சம் வரை சேர்த்திருக்கிறார்கள். 2 கோடி வரை நிதி சேர்க்க வேண்டுமென திட்டமிட்டுள்ளார்களாம். 100 படுக்கைகளையும் ஏழை நோயாளிகளுக்காகப் பயன்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக தனியாக ஆக்சிஜன் பிளான்ட் ஒன்றையும் நிறுவும் திட்டமும் உள்ளதாம்.
தனது சொந்த ஊரில் தனக்கு அருகாமையில் உள்ள மக்கள் படும் சிரமங்களைப் பார்த்து ஹுமா குரேஷி இந்த நிதி சேர்க்கும் திட்டத்திற்கு உதவி வருகிறாராம். டில்லியைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பிற நகரங்களிலும் இப்படி மருத்துவமனைகளை அமைக்கும் திட்டமிட்டுள்ளார்களாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!