
ஷங்கருக்கு எதிராக அடுத்த நடவடிக்கையில் லைகா
இந்தியன் 2" படத்தை முடிக்கும் வரையில் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற லைகாவின் கோரிக்கை நீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும், தயாரிப்பு நிறுவனம் மீதே குற்றச்சாட்டுகளை வைத்தார் ஷங்கர்.
அதனால் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ள லைகா நிறுவனம் ஷங்கர் மீது அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் ஷங்கர் மீது புகார் கொடுத்துள்ளார்களாம். தங்களது "இந்தியன் 2" படத்தை முடித்துக் கொடுத்த பிறகே அவர் தெலுங்கு, ஹிந்தியில் ஒப்பந்தமாகியுள்ள படங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
"இம்சை அரசன் 24ம் புலிகேசி" பட விவகாரத்தில் வடிவேலு மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து அவரை படங்களில் நடிக்க வைக்க விடாமல் மறைமுக அழுத்தம் கொடுத்தவர் ஷங்கர் என கோலிவுட்டில் சொல்கிறார்கள். அதே பார்முலாவைப் பயன்படுத்தி ஷங்கரையும் தடுக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் முயல்கிறதாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!