
சிவகார்த்திகேயன் படத்திற்கு முதன்முறையாக யு/ஏ சான்றிதழ்
இது சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு சற்று அதிர்ச்சியான செய்தியாகத்தான் இருக்கும்.. காரணம் சிவகார்த்திகேயன் இதுநாள் வரை நடித்த படங்களில் முதன்முறையாக யு/ஏ சான்றிதழ் பெறுவது இந்தப்படம் தான்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அனைத்தும், எப்போதுமே குழந்தைகளை கவரும் விதமாகவே உருவாக்கப்பட்டு வருவதால் இதுநாள் வரை அவரது படங்களுக்கு யு சான்றிதழ் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் டாக்டர் படத்தில் உச்சபட்ச ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் படம் 2 மணி 28 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!