
பாலகிருஷ்ணாவுடன் முதன்முதலாக இணைந்த பூர்ணா
அடுத்து தெலுங்கில் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்து வரும் அகந்தா படத்தில் பிரக்யா ஜெய்ஸ்வாலுடன் இன்னொரு நாயகியாக பூர்ணா நடிக்கிறார். கதைப்படி ஐஏஎஸ் அதிகாரியாக நடிப்பவர் பாலகிருஷ்ணாவின் மனைவியாகவும் நடிக்கிறார். படத்தின் இரண்டாம் பாகத்தில் தோன்றும் ஒரு அழுத்தமான வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். இதற்கு முன்பு நடித்துள்ள தெலுங்கு படங்களை விட இந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தெலுங்கு சினிமாவில் தனக்கு இப்படம் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் படமாக அமையும் என்று நம்புகிறார் பூர்ணா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!