மாரடைப்பு : தயாரிப்பாளர் முரளி ராமசாமி மருத்துவமனையில் சிகிச்சை
Advertisement
Advertisement
மாரடைப்பு : தயாரிப்பாளர் முரளி ராமசாமி மருத்துவமனையில் சிகிச்சை
மே 11, 2021
அ நிறம் | அளவு
Advertisement
தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்தவர் மறைந்த இயக்குனர் தேனாண்டாள் பிலிம்ஸ் ராம நாராயணன். இவரது மகன் முரளி ராமசாமி. தற்போது பட தயாரிப்பிலும், படங்களை விநியோகித்தும் வருகிறார். மெர்சல் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். அதோடு தற்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்நிலையில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதை சரி செய்வதற்கான சிகிச்சை அளித்த பின் தற்போது அவர் நலமாக உள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!