
விரைவில் ஆர்ஆர்ஆர் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
மே 11, 2021
Advertisement
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியாபட் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தை இந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 முதல் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதாம். ஆனால் தற்போதைக்கு கொரோனா அலை ஓயக்கூடிய சூழல் இல்லை என்பதால், ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீசை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர். அந்த வகையில், ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய வெளியீட்டு தேதியை ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளான மே 20-ந்தேதி அறிவிக்க படக்குழு முடிவெடுத்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!