
முதல்வரைப் பாராட்டி டுவிட்டருக்குள் வந்த பாலா
தற்போது புதிய வரவாக இயக்குனர் பாலா டுவிட்டர் பக்கம் வந்திருக்கிறார். அவருடைய முதல் டுவீட்டாக முதல்வரைப் பாராட்டி கடிதம் எழுதி அதன் மூலம் டுவிட்டரில் தன் முதல் பதிவை இட்டிருக்கிறார்.
“தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிப்பதைத் தவிருங்கள்," என்று கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும், இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம், நன்றிகள்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்,
கோனோக்கி வாழுங் குடி,” என்ற குறளுடன் தன் பாராட்டு மடலைப் பதிவிட்டிருக்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!