
கொரோனா விதி மீறல்: லியோனி மகன் படக் குழுவினருக்கு அபராதம்
இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு படப்பிடிப்பு நடந்தது. சுற்றிலுமுள்ள கிராம மக்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர்.
படப்பிடிப்பு குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் பெற்ற அனுமதி கடிதத்தை காட்டினர். என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தவும் அனுமதிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பை பாதியிலேயே ரத்து செய்து விட்டு படப்பிடிப்பு குழுவினர் கிளம்பிச் சென்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!