
இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்க பவன் கல்யாண் முடிவு
பவன் கல்யாண் நடித்து இந்த மாதம் தியேட்டர்களில் வெளியான "வக்கீல் சாப்" படம் ஆரம்பத்தில் நல்ல வசூலுடன் ஓடியது. பின்னர் வசூல் குறைந்தது. இந்நிலையில் தியேட்டர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படத்தை ஓடிடி தளத்தில் இன்று வெளியிட்டுள்ளார்கள்.
பவன் கல்யாண் அடுத்து "ஹரிஹர வீர மல்லு," மற்றும் மலையாளத்தில் வெளிவந்த "அய்யப்பனும் கோஷியும்" படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். ஜுலை மாதத்திற்குப் பிறகுதான் அப்படங்களின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ள உள்ளாராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!