
ராணா பூஜை நடந்து 10 ஆண்டுகள் : ரஜினிகாந்த் ஆசை நிறைவேறுமா?
அதன்பின் அந்தப் படம் அப்படியே கைவிடப்பட்டது. சமீபத்தில் தன்னுடைய தயாரிப்பில் ஆரம்பமான புதிய படத்தின் பூஜையின் போது ரஜினிகாந்த் மீண்டும் ராணா கதையை முழுவதுமாகக் கேட்டார் என கேஎஸ் ரவிக்குமார் சொன்னார்..
|
ராணா படம் ஒரு வரலாற்றுப் படம். ஏஆர் ரகுமான் இசையமைக்க, அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். மிகவும் பிரம்மாண்டமான படமாக உருவாக வேண்டிய படம். பத்து வருடங்களுக்கு முன்பே அப்படம் தயாராகி வெளியாகியிருந்தால் பாகுபலி படத்திற்கு முன்பே ஒரு சரித்திர சாதனையைப் படைத்திருக்கலாம்.
ரஜினிகாந்தும் அரசியல் ஈடுபடும் எண்ணத்தை அறவே விட்டுவிட்டார். எனவே, ராணா படம் மீண்டும் உருவாகாதா என்ற ஏக்கத்தில் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் மனது வைத்தால் படம் மீண்டும் உருவாகலாம்.
பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது தொழில்நுட்பம் நிறையவே மாறிவிட்டது. அதனால், நிச்சயம் ஒரு பிரம்மாண்டப் படைப்பாக இருக்கும். ரசிகர்களின் ஆசையையும் தன்னுடைய ஆசையையும் ராணா மூலம் நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!