
ரியல் குயின் : ஓவியாவைப் புகழும் சனம் ஷெட்டி
ஓவியா இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். டுவிட்டரில் அதற்காக "காமன் டிபி"யை வெளியிட்ட மூன்றாம் சீசனின் போட்டியாளரான சனம் ஷெட்டி, ஓவியாவை மிகவும் புகழ்ந்துள்ளார்.
“ரியாலிட்டி ஷோக்களின் முதல் ரியல் குயின். உலக அளவில் இதயங்களை வென்றவர், முதல் ஆர்மி பக்கங்களுக்குக் காரணமானவர். அவருடைய அப்பாவித்தனத்திற்காகவும், போராட்ட குணத்திற்காகவும் நினைவு கூற வேண்டியவர். ஒன் அன்ட் ஒன்லி ஓவியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார் சனம். அதற்கு ஓவியா உங்கள் அன்பான வாத்தைகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!