
அன்னை இல்லத்தில் இருந்து 108 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் - ராம்குமார்
இந்நிலையில் ராம்குமார் வெளியிட்ட அறிக்கை : நடிகர் திலகத்தின் ஆசியுடனும், இறைவன் அருளுடனும் பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேன். என்னுடன் பிரச்சாரத்தில் உடனிருந்து உதவிய நடிகர் திலகத்தின் இதயங்கள், நண்பர்களுக்கு நன்றி. கொரோனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவ தொடங்கி உள்ளது. மக்கள் அனைவரும் முக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.
இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21 நடிகர் திலகத்தின் நினைவுதினத்தையொட்டி இந்தாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் விரைவில் தெரிவிக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!