மனிஷா யாதவுக்கு கொரோனா
ஏப் 21, 2021
Advertisement
வழக்கு எண் 18, ஒரு குப்பைக் கதை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மனிஷா யாதவ். சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டாலும் முழுமையாக சினிமாவை விடவில்லை. நல்ல படங்கள் வந்தால் நடிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் கொரோனாவால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமையில் உள்ளேன், ஆனால் சீக்கிரம் குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைக்கு மோசமாக இல்லை. லேசாக மூச்சுத்திணறல் மட்டும் உள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை பெறுகிறேன். இந்த நோயை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்"" என பதிவிட்டுள்ளார் மனிஷா.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!