
தடுமாற்றத்தில் அஜித்தின் வலிமை படக்குழு
இந்த வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் மல்லுக்கு நின்றதை அடுத்து மே 1-ந்தேதி பர்ஸ்ட்லுக் வெளியாகும் என அறிவித்த போனிகபூர், அதைத் தொடர்ந்து வலிமை படத்தின் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிவித்து அஜித் ரசிகர்களை அமைதிப்படுத்தினர்.
ஆனபோதிலும் வலிமை படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை திட்டமிட்டபடி ஸ்பெயின் நாட்டிற்கு சென்று படமாக்க முடியாமல் தற்போது படக்குழு தடுமாறிக் கொண்டிருக்கிறது. உலகமெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவிக்கொண்டிருப்பதால் ஸ்பெயினுக்கு சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம். இதனால் அந்த ஆக்சன் காட்சியை ஸ்பெயின் செல்லாமல் இந்தியாவிற்குள்ளேயே படமாக்க வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? என்று வலிமை படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் வலிமை படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!