
வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம்
படம் பற்றி அவர் கூறியதாவது: இதுவரை பல வகையிலான விளம்பர படங்களை இயக்கியுள்ளேன். ஆனால் எப்போதும் என்னுடைய கனவு திரைப்படத்தை இயக்குகிறேன். திரைக்கதையை எழுதி முடித்த பிறகு புதுமையான முயற்சிகளை அங்கீகரிக்கும், ஒரு நல்ல தயாரிப்பாளரை தேடினேன்.
அந்த வகையில் துவக்கத்திலேயே இறைவி கருப்பன் என தரமான படங்களை விநியோகம் செய்த, தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர் அவர்களை அணுகினேன். முழு திரைக்கதையை அவரிடம் விவரித்தவுடனேயே படத்தை தயாரிக்க ஒப்புகொண்டு சம்மதம் தெரிவித்தார்.
இப்படத்தில் முதன்மை பாத்திரத்திற்கு என்னுடைய முதல் தேர்வாக இருந்தவர் நடிகர் வெற்றி. தரமான படங்களில் பரிசோதனை பாத்திரங்களில் நடித்து, தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தவர். அவருக்கும் திரைக்கதை வெகுவாக பிடித்திருந்தது. உடனடியாக நடிப்பதற்கு ஒப்புகொண்டார்.
இது ரோட் மிஸ்ட்ரி வகை கதை. இந்த மாதிரி படங்களில் எப்போதும் க்ளைமாக்ஸில் தான் சீட்டின் நுனியில் வைத்திருக்கும் பகுதிகள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே அம்மாதிரி பகுதிகள் இருக்கும்.
கோடைகாலம் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளோம். தற்போது படத்தின் மற்ற நடிகர் குழு மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இறுதி செய்யும் பணியில் உள்ளோம். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!