
தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா
சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தெலுங்கில் முதல் முறையாக நடிக்க உள்ளார். விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி கதாநாயகனாக நடிக்கும் "அன்டே சுந்தரநிக்கி" என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இது பற்றி நஸ்ரியா, “எனது முதல் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம். முதல் என்பது எப்பவுமே ஸ்பெஷல்தான். "அன்டே சுந்தரநிக்கி"யும் ஸ்பெஷல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஐதராபாத்திற்கு தனது கணவர் பகத் பாசிலுடன் சென்றுள்ளார். அதனால், பகத்தும் தெலுங்கில் அறிமுகமாக உள்ள "புஷ்பா" படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் மனைவி நஸ்ரியாவுக்குத் துணையாகத்தான் தற்போது சென்றுள்ளாராம். "புஷ்பா" படத்தின் படப்பிடிப்பு தற்போது இல்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!