
ஒரு படத்தை 267 முறை பார்த்த நடிகை
"ஸ்காம் 1992" இணையத் தொடரில் நடித்துள்ள நடிகை ஸ்ரேயா தன்வன்த்ரி. தெலுங்குப் பெண்ணான இவர் தற்போது ஹிந்தித் திரையுலகில் நடித்து வருகிறார்.
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெங்கடேஷ், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்து 1991ம் ஆண்டு வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்ற படமான "க்ஷன க்ஷனம்" படத்தைத்தான் இவர் 267 முறை பார்த்துள்ளாராம்.
“என்னுடைய அபிமான தெலுங்குப் படத்தை 267வது முறையாக மீண்டும் பார்க்கிறேன். ராம்கோபால் வர்மா, வெங்கடேஷ், ஸ்ரீதேவி, பரேஷ் ராவல் அவர்களின் முழுமையான சிறந்த படம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
267வது முறை எனக் குறிப்பிட்டுள்ளதன் மூலம் ஒவ்வொரு முறை பார்த்ததையும் சரியாகக் கணக்கு வைத்திருப்பாரோ ?. சீக்கிரமே 300வது முறை பார்த்துவிட்டேன் என பதிவிட வாழ்த்துவோம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!