
மீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்
கடந்த வருடம் கொரோனா தொற்று இருந்த சமயத்தில் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டியைக் கொண்டாட தனது சொந்த ஊருக்கு தனி விமானத்தில் இந்த காதல் ஜோடி பறந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
|
இந்நிலையில் இன்று தனி விமானத்தில் செல்லும் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். விமானத்தில் அமர்ந்திருக்கும் நயன்தாராவை வழக்கம் போல அவர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
|
கேரளாவில் ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காகச் செல்கிறார்களா அல்லது வேறு ஏதும் தனிப்பட்ட காரணமா என்பது தெரியவில்லை.
|
நயன்தாரா தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!