பிரபாஸ் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியா ?
ஏப் 04, 2021
Advertisement
"பாகுபலி" படங்களுக்குப் பிறகு பான் இந்தியா நடிகராகிவிட்டவர் பிரபாஸ். தற்போது அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகிறார். மேலும், ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் திறமையான வளரும் இயக்குனர்களின் இயக்கங்களில் நடிக்கவும் முடிவு செய்து அதன்படி நடித்து வருகிறார்.
கன்னடத்தில் "கேஜிஎப்" என்ற மிரட்டலான ஆக்ஷன் படத்தைக் கொடுத்த பிரஷாந்த் நீல் இயக்கத்தில் "சலார்" படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தமிழ் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கப் போவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது.
விஜய் நடித்த "மாஸ்டர்" படத்தை இயக்கிய பிறகு லோகேஷும் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். பிரபாஸ், லோகேஷ் இணைவது உறுதியானால் அடுத்த வருட மே மாதத்தில் படம் ஆரம்பமாகும் என்கிறார்கள். அதற்குள் கமல்ஹாசன் நடிக்க உள்ள "விக்ரம்" படத்தை லோகேஷ் முடித்துவிடுவார் என்கிறார்கள்.
ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் இந்தக் கூட்டணியின் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்குச் செல்லும் போது மேலும் தகவல் வெளியாகலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!