
அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஷங்கருக்கு இரண்டாவது இடம்
தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர்களில் "பாகுபலி" படம் வரும் வரையில் ஷங்கர் தான் முதலிடத்தில் இருந்தார். தற்போது "பாகுபலி, ஆர்ஆர்ஆர்" படங்களின் இயக்குனர் ராஜமவுலி ஷங்கரை முந்திவிட்டார்.
ராஜமவுலிக்கு "ஆர்ஆர்ஆர்" படத்திற்காக 75 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாம். "இந்தியன் 2" படத்திற்காக ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளோம் என தயாரிப்பு நிறுவனமே தெரிவித்துள்ளது. ஷங்கர் அடுத்து இயக்கும் தெலுங்குப் படத்திற்கும் அதே சம்பளம் பேசியிருக்கலாம், அல்லது கூடுதலாக 5 கோடி வரை பேசியிருக்கலாம் என்கிறார்கள்.
நடிகர்களில் கூட "பாகுபலி" நாயகன் பிரபாஸ் மற்ற தென்னிந்திய நடிகர்களை மிஞ்சிவிட்டார். அவருக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம், சில பல உரிமைகள் தரப்படுகின்றன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!