
சர்க்கஸில் சேர விரும்பும் ராய்லட்சுமி
தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் ராய்லட்சுமிக்கு வழக்கமான உடற்பயிற்சி முறைகளும் அதற்கான சாதனங்களும் போரடித்து விட்டதாம். அதனால் விதவிதமான உடற்பயிற்சி உபகரணங்களை விரும்பி வாங்கி, அதில் தனது உடற்பயிற்சி முறையை மாற்றியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ராய்லட்சுமி, “உடற்பயிற்சி செய்வதற்கு புது வழிகளை கண்டுபிடித்துள்ளதால் எனக்கு போரடிப்பதில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது பேசாமல் சர்க்கஸில் சேர்ந்து விடலாமா என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!