
தளபதி ஸ்டைலில் ரஜினியை வாழ்த்திய மம்முட்டி
அந்த வகையில், பிரபல மலையாள நடிகரான மம்முட்டி, வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியும், மம்முட்டியும் தளபதி படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். நட்பின் அருமையைப் பேசும் அந்தப் படத்தில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டியும் நடித்திருந்தார்கள்.
அதை வைத்து தளபதி பட பாணியில் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துக்களைக் கூறியுள்ளார் மம்முட்டி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்டில், “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா” எனப் பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!