
முதல் கன்னட படம் ரிலீஸ் - சாயிஷா மகிழ்ச்சி
நடிகர் ஆர்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்ட சாயிஷா, கன்னடத்தில் புனீத் ராஜ்குமார் ஜோடியாக நடித்துள்ள "யுவரத்னா" படம் நாளை(ஏப்., 1) வெளியாக உள்ளது. இப்படம் மூலம் கன்னடத்திலும் அறிமுகமாகிறார் சாயிஷா.
அந்த மகிழ்ச்சியை நடனமாடி வெளியிட்டுள்ளார். “நாளை வெளியாக உள்ள "யுவரத்னா" படத்தின் வெளியீட்டிற்காக நான் இப்படித்தான் உற்சாகமாக உள்ளேன். உங்களது இதயங்களிலும் நான் நடனமாட முடியும் என நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி, தமிழ், ஆகியவற்றைத் தொடர்ந்து கன்னடத்திலும் தடம் பதிக்கிறார் சாயிஷா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!