
சத்தமின்றி புதிய படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி
இதற்கிடையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் சத்தமே இல்லாமல் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதனை 8 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பரவலான பாராட்டுகளை பெற்ற விடியும் முன் படத்தின் இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்குகிறார்.
விடியும் முன் படத்தில் பூஜா நடித்திருந்தார். ஒரு குழந்தையை காப்பாற்ற ஒரு இரவில் போராடும் ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, விடியும் முன். தற்போது பாலாஜி குமார் இயக்கி வரும் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக இறுதிசுற்று ரித்திகாசிங் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றி நடந்து வருகிறது. 25 நாளில் படத்தை முடிக்க திட்டமிட்டு ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படம் ஓடிடி தளத்திற்காக தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாளில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!