
நிறைய தேசிய விருது எதிர்பார்த்தேன்: மதுமிதா வருத்தம்
இந்த படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் நிறைய விருதுகள் எதிர்பார்தேன். இது ஏமாற்றம் அளிக்கிறது என்று மதுமிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‛‛கேடி என்கிற கருப்புதுரையின் பயணம் இனிமையானது. அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் நன்றி. தேசிய விருதுகளில் இன்னும் கூடுதலான விருதுகளை பெறாததில் எங்களுக்கு வருத்தம் இல்லை என்று சொன்னால் அது அப்பட்டமான பொய். ஏனென்றால் எல்லா அம்மாக்களுக்கும் அவர்கள் குழந்தைகள் தகுதியானவர்கள் தான்"" என்று எழுதியிருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!