
ஹன்சிகா வீட்டில் விசேஷம்: சகோதரருக்கு திருமணம்
கொரோனா இரண்டாவது அலை காரணமாக 3 நாட்களாக நடந்த திருமண விழா கொண்டாட்டங்களில் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஹன்ஷிகா மோத்வானியின் தாயார் டாக்டர் மோனா மோத்வானி, மற்றும் நண்பர்கள், நெருங்கிய குடும்ப உறவுகள் பங்கேற்றனர். திருமண நிகழ்வுகள் அனைத்தும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு, நடைபெற்றது.
அண்ணன் திருமணம் குறித்து ஹன்சிகா கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் மிகப்பெரும் கொண்டாட்ட நிகழ்வு, வாழ்வின் மறக்க முடியாத தருணம், அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. என் குடும்பத்தில் மேலும் ஒரு உறுப்பினராக முஷ்கான் இணைந்துள்ளார். நாங்கள் தற்போது இணைபிரியா சகோதரிகள் ஆகிவிட்டோம். இரண்டு இனிய இதயங்கள் வாழ்வில் ஒன்றாக இணைந்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!