
99 சாங்ஸ்: ஏ.ஆர்.ரஹ்மான் சொந்த கதையா?
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி பரவலான பாராட்டை பெற்றுள்ளது. இசையால் வாழ்க்கையை இழந்த ஒரு குடும்பத்தை அந்த குடும்பத்தில் இருந்து வரும் ஒரு இளைஞன் எப்படி தூக்கி நிறுத்துகிறான் என்பதுதான் கதை. 100 பாடல்களை உருவாக்க வேண்டும் என்று போராடுகிற அவர் 99வது பாடல் உருவாக்கத்தின் போது எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் திரைக்கதை.
இதன் கதையை ஏ.ஆர்.ரஹ்மான் எழுதியுள்ளார். டீசரை பார்த்த நெட்டிசன்கள் இது ஏ.ஆர்.ரஹ்மானின் சொந்த கதை என்ற கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். "தி தேவாரிஸ்ட்ஸ்" மற்றும் "பிரிங் ஆன் தி நைட்" ஆல்பங்களை இயக்கிய விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஏஹன் பட், எடில்ஸி வர்காஸ் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது: பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே "99 சாங்ஸ்"ன் மையக் கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட் மற்றும் ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!