
காட்சில்லா Vs காங் - எதிர்பார்க்கும் தியேட்டர்காரர்கள்
இப்படம் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது. கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டதில் "மாஸ்டர்" படத்திற்குத்தான் ரசிகர்கள் அதிகம் வந்தனர்.
இப்போது இப்படத்தைத்தான் தியேட்டர்காரர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். எப்படியும் இளம் ரசிகர்கள் இந்தப் படத்தை வந்து பார்ப்பார்கள் என தியேட்டர்காரர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் எதிர்பார்த்தபடி ஓடாத காரணத்தால் இப்படம் தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் வெளியாகிறது.
ஆடம் வின்கார்ட் இயக்கியுள்ள இப்படத்தில் அலெக்சாண்டர் ஸ்கர்கிலார்ட், மில்லி பாபி பிரௌன், ரெபக்கா ஹால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!