
மகாபாரதத்திற்கு இன்னொரு பெயர் ஜெயா - அசத்தும் தலைவி டிரைலர்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிரைலருக்கு தமிழை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் 3.03 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் சினிமாவில் ஜெயலலிதா உச்ச நட்சத்திரமாக மாறியது, எம்.ஜி.ஆர்., அவரை அரசியலுக்கு அழைத்து, அவரையே அரசியல் வாரிசாக கொண்டு வர நினைத்தது, அதற்கு பின்னால் அவர் சந்தித்த அரசியல் போராட்டங்கள் அனைத்தையும் பேசும்படி காட்சிகள் உள்ளன.
டிரைலரிலேயே ஜெயலலிதாவாக கங்கனா மிரட்டி உள்ளார். குறிப்பாக டிரைலரில் வரும், ‛‛மகாபாரதத்திற்கு இன்னொரு பெயர் ஜெயா, நீ மக்களை விரும்பினால் மக்கள் உன்னை விரும்புவார்கள் அது தான் அரசியல், என்னை அம்மாவாக பார்த்தீர்கள் என்றால் என் இதயத்தில் இடமிருக்கும், என்னை வெறும் பொம்பளையா பார்த்தீங்கனா..."" போன்ற வசனங்கள் பட்டையை கிளப்பி உள்ளன. அதோடு சட்டசபை வளாகத்தில் ஜெயலலிதாவை மிகவும் கீழ்த்தரமாக நடத்திய காட்சிகள், எம்ஜிஆர்., இறந்த சமயத்தில் அவரை கீழே தள்ளிய காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளன.
அதேசமயம் தமிழ் டிரைலரில் இடம்பெறாத சில காட்சிகள் ஹிந்தி டிரைலரில் இடம் பெற்றுள்ளன. அவை இதில் இடம் பெற்று இருந்தால் நிச்சயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தும். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இந்தப் படத்தின் டிரைலர் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!