
வாத்தி கம்மிங் வீடியோ பாடல் - 100 மில்லியன் சாதனை
அப்பாடல் தற்போது யு டியுபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த பாடல்களில், "மெர்சல்" படத்தின் "ஆளப் போறான் தமிழன்" மற்றும் "மாஸ்டர்" படத்தின் "வாத்தி கம்மிங்" பாடலின் லிரிக் வீடியோ, "பிகில்" படத்தின் "வெறித்தனம்", "தெறி" படத்தின் "என் ஜீவன்" ஆகியவை 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தன.
இப்போது "வாத்தி கம்மிங்" பாடலின் வீடியோவும் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இரண்டு மாதத்திற்குள் இந்த சாதனையை இப்பாடல் 100 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது. இப்பாடலின் லிரிக் மற்றும் வீடியோ இரண்டும் சேர்த்தால் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
தமிழ் சினிமா பாடல்களில் 100 மில்லியன் கிளப்பில் விஜய்யின் பாடல்கள்தான் அதிக முறை இடம் பிடித்துள்ளன.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!