
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி
தமிழில் முன்னணி நாயகனாக வலம் வந்த கார்த்திக், அரசியல் என பாதை மாறியதால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது, ‛தீ இவன்" என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் மனித உரிமை காக்கும் கட்சி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக ., - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய போவதாகவும் அறிவித்தார். கட்சி தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ‛நெகட்டிவ்" என ரிசல்ட் வந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!