
ஹிந்தி டிவி ஷோ வரை சென்ற வாத்தி கம்மிங்
ஹிந்தியிலும் வெளியான "மாஸ்டர்" படம் அங்கு தோல்வியடைந்தாலும் "வாத்தி கம்மிங்" பாடல் வட இந்தியாவிலும் பிரபலமாகிவிட்டது. சோனி டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சூப்பர் டான்சர் சாப்டர் 4" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் இப்பாடலுக்காக நடனமாடிய புரோமோ ஒன்றை அந்த டிவி நிறுவனம் இரு தினங்களக்கு முன்பு வெளியிட்டது.
அதை தற்போது விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து இன்று "வாத்தி கம்மிங்" ஐ டுவிட்டர் டிரென்டிங்கில் மீண்டும் வரவழைத்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி ஏற்கெனவே இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றும் யு டியுபில் பிரபலம்தான்.
இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி தான் ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளிவந்தால் அதுவும் நிச்சயம் வைரலாகிவிடும் என்பதை இப்போதே சொல்லலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!