
நடிகை ஆன ஏ.ஆர்.ரஹ்மான் மாணவி
இதுகுறித்து அவர் கூறியதாவது: இசையும், நடிப்பும் என் இரு கண்கள். இசை கற்றுக் கொண்டே நடிக்கவும் செய்கிறேன். தனி இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறேன். இசைக்கென்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கும் திட்டமும் இருக்கிறது. 4 வயதிலிருந்தே பாடி வருகிறேன். பல அழகிப் போட்டிகளில் டைட்டில் பெற்றிருக்கிறேன். இந்த இரண்டும் தான் என்னை இசை மீதும், நடிப்பின் மீதும் நம்பிக்கை கொள்ள வைத்தது. ரஹ்மான் சார் பள்ளியில் தற்போது மேற்கத்திய இசை பயிற்சி பெற்று வருகிறேன். 2 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு இசை பயிற்சியும் அளித்து வருகிறேன். விளம்பர மாடலாகவும் பணியாற்றி வருகிறேன். இசை மற்றும் நடிப்பில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருக்கிறேன் என்கிறார் அகிலா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!