
ஆஸ்கர் விருதுகளை அள்ளப்போகும் மன்க்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தில் கேரி ஓல்ட்மேன், அமாண்டா சேப்ரீட், லில்லி காலின்ஸ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கருப்பு வெள்ளையில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கதை 1930களில் நடப்பதால் அதன் உயிரோட்டம் கெடாமல் இருக்க கருப்பு வெள்ளையில் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு சினிமா இயக்குனருக்கும், முன்னணி நடிகைக்குமான கதை இது.
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் பிளாக் பாந்தராக நடித்த சட்விக் போஸ்மேன் கடந்த ஆண்டு, புற்று நோயால் மரணம் அடைந்தார். அவர் நடித்து கடைசியாக வெளியான பிளாக் பாட்டம் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடுகிறது. சிறந்த நடிகருக்கான விருது சட்விக் போஸ்மேனுக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மன்க் படத்திற்கு குறைந்தது 6 விருதுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!