
ஆஸ்கர் ரேசில் இருந்து வெளியேறியது சூரரைப்போற்று
2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பட வரிசையில் இடம்பெற்றது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், கதாசிரியர் பிரிவில் இது இருந்தது.
ஆஸ்கர் போட்டிக்கான இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சூரரைப்போற்று படம் இடம்பெறவில்லை. இதன் மூலம் சூரரைப்போற்று ஆஸ்கர் ரேசில் இருந்து வெளியேறி விட்டது.
ஏற்கெனவே மலையாள படமான ஜல்லிக்கட்டு முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இறுதி பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள தி ஒயிட் டைகர் என்ற ஹாலிவுட் படம் இடம் பெற்றுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!