ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்படும் அசுரன்
மார் 16, 2021
Advertisement
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் 2019ல் வெளியாகி, வரவேற்பையும், வசூலையும் குவித்த படம் அசுரன். ஏற்கனவே கோவா சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சில திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது. இப்படம் தந்த வெற்றியால் நடிகர் தனுஷ் டுவிட்டரில் கூட தனது புரொபைல் பெயருக்கு கீழே அசுரன் என வைத்துள்ளார்.
இந்நிலையில் ஜப்பானில் நடக்கும் ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிட தேர்வாகி உள்ளது. அதோடு சிறந்த தமிழ் பட பிரிவிலும் போட்டியிடுகிறது. இம்மாதம் 27, 28 தேதிகளில் இந்த விருது வழங்கும் விழா ஓசாகா நகரில் நடைபெறுகிறது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!