
மே 1 முதல் வலிமை அப்டேட் : தயாரிப்பாளர் அறிவிப்பு
பின்னர், அஜித் தரப்பிலிருந்து அறிக்கை விட்டும், அஜித் ரசிகர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. நேற்று அஜித் ரசிகர் ஒருவர் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை டுவிட்டரில் டேக் செய்து வலிமை அப்டேட் எப்ப எனக் கேட்டுள்ளார். அதற்கு வானதி சீனிவாசன், “நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி” என பதிலளித்திருந்தார்.
இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் அஜித் ரசிகர்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நினைத்துவிட்டார் போலும். தற்போது, “முதல் பார்வை மற்றும் வலிமை படத்தின் பிரமோஷன்ஸ் அஜித்குமாரின் 50வது பிறந்தநாளான மே 1 முதல் ஆரம்பமாகும்,” என அறிவித்துவிட்டார்.
இனி, வலிமை அப்டேட் பற்றி அஜித் ரசிகர்கள் கேட்க மாட்டார்கள் என்பது உறுதி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!