
காசு கொடுத்தால்தான் ஓட்டு -யோகிபாபுவின் மண்டேலா டீசர் அலப்பறை
இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதைப்பார்க்கும்போது தேர்தலை மையப்படுத்திய கதையில் இப்படம் உருவாகியிருப்பது தெரிகிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெளிநாட்டில் இருந்து யோகிபாபுவை வரவைக்கிறார்கள். அதையடுத்து வாக்க ளிக்கும் பூத்தில் ரெண்டு பேர்தான் நிக்கிறதா சொன்னீங்க. மூனாவதா ஒருத்தன் நிக்கான். எனக்கு காசே கொடுக் கலையே என்று நோட்டாவைப்பார்த்து கேட்கிறார். அது நோட்டா என்று மற்றவர்கள் சொல்ல, நோட்டாவோ கோட்டாவோ எதுவாக இருந்தாலும் காசு கொடுத்தால்தான் ஓட்டு என்கிறார் யோகிபாபு. இப்படி காமெடி படம் என்றாலும் அதற்குள் ஒரு கருத்தினை வைத்து மண்டேலா படம் உருவாகியிருப்பது அந்த டீசரில் தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!