
மீண்டும் டிவி தொகுப்பாளராகும் விஜய் சேதுபதி ?
மேலும், சில முன்னணி நடிகர்களே டிவி நிகழ்ச்சிகளை கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வருவதால் சினிமா, டிவி என பிரித்துப் பார்த்த இமேஜ் எல்லாம் மலையேறிவிட்டது.
"பிக் பாஸ்" நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க அவருக்கு சினிமாவில் நடிப்பது போன்ற சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை.
நடிகர் விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான "நம்ம ஊரு ஹீரோ" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சி பெரிய அளவில் புகழடையவில்லை. இப்போது மீண்டும் டிவி தொகுப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் விஜய் சேதுபதி.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள சமையல் நிகழ்ச்சியில் அவர்தான் தொகுப்பாளராம். அதை வழக்கமான நிகழ்ச்சி போல அல்லாமல் முற்றிலும் பிரம்மாண்டமாக உருவாக்க "பிக் பாஸ்" நிகழ்ச்சியைத் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்களாம். விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறது டிவி வட்டாரம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!