
ஒட்டகத்துடன் இப்படியா?
சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர்களில் யாஷிகாவும் ஒருவர். அடிக்கடி தனது கவர்ச்சியான படங்களை பதிவிடுவது அவரது ஸ்டைல். இதனாலேயே அவருக்கு நிறைய பாலோயர்கள் உள்ளனர்.
இந்நிலையில் துபாய் விலங்கு நல பூங்கா ஒன்றில் தான் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார் யாஷிகா. அதில், அங்கிருக்கும் விலங்குகளோடு கொஞ்சி விளையாடும் யாஷியா, ஒட்டகம் ஒன்றிற்கு சிறு துண்டு இலையை தனது வாயில் வைத்துக் கொடுக்கிறார். ஒட்டகமும் அவரிடம் இருந்து அதைப் பிடுங்கி சாப்பிடுகிறது.
பார்ப்பதற்கு இந்தக் காட்சி காதலர்களின் ரொமான்ஸ் மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். கூடவே ஒட்டகத்திற்கு இலையைக் கையில் தரக் கூடாதா என திட்டவும் செய்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!