
தமிழ் கன்னடத்தில் உருவான ரீவைண்ட்
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த நான்கு வருட இடைவெளியில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ரீவைண்ட் என்கிற பெயரில் இருமொழி படம் ஒன்றை தயாரித்துள்ளேன் கர்நாடகாவில் ஏப்ரல் 16ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது தமிழில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம்.
ஒரு பத்திரிக்கை நிருபர், கார்ப்பரேட் மாபியா ஒன்றை எதிர்த்து டெக்னாலஜி உதவியுடன் போராடுகிறார். இது மனிதனின் மூளை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான அம்சத்தை மையமாக கொண்ட சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.
இதுதவிர தற்போது கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். விரைவில் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியா முழுமைக்குமான படம் ஒன்றை நடித்து இயக்கவுள்ளேன். படத்தின் பெயர் காட் . அதாவது "குளோரி ஆப் டான்" என்பதன் சுருக்கம் தான் அது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!