
அனுராதா மகனின் பூம் பூம் காளை
ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜே.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள பூம் பூம் காளை படத்தில் கெவின் ஹீரோவாக நடிக்கிறார். ஆர்.டி.குஷால் குமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் சிவலிங்கா படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, சச்சு, கிரேன் மனோகர், அபிநயஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஆர்.டி.குஷால் கூறியதாவது: நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள். நாயகனோ திருமணம் முடிந்த பின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே. அது நடப்பது எப்போது என பூம் பூம் காளையாக அலைபாய்கிறான். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறோம். என்றார். படம் நாளை வெளிவருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!